கம்பஹா பபா விளக்கமறியலில்

கம்பஹா பபா 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

by Staff Writer 17-01-2026 | 2:16 PM

Colombo (News 1st)- திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கம்பஹா பபா’ எனப்படும் தினேஷ் நிஷாந்த குமாரவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கம்பஹா பபா 90 நாட்கள் பேலியகொட பொலிஸாரினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

களனி குற்றப் புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார். 

கம்பஹா பபா எனப்படும் தினேஷ் நிஷாந்த குமார கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷார செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். 

அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் உள்ளிட்ட குழுவினர் கடந்த வருடம்  ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.