.webp)
-608575-553036.jpg)
Colombo (News1st) போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக ஒருநாள் சிகிச்சை மற்றும் 03 புனர்வாழ்வு மத்திய நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவின் பணிப்பாளர் ஷாந்த கமகே தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஒருநாள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மத்திய நிலையத்தில் சிகிச்சைக்காக வருவோருக்கு ஒரே நாளில் சிகிச்சையை பெற்று வீடு திரும்ப முடியும் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டு சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவின் பணிப்பாளர் ஷாந்த கமகே கூறினார்.
