800 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

டித்வா புயலால் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 800 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

by Staff Writer 15-01-2026 | 8:10 PM

Colombo (News 1st) டித்வா புயலினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இதுவரை இழப்பீடாக 800 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

22,000 விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரமராச்சி குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி செய்கைகள் அழிவடைந்தமைக்காக 18,200 விவசாயிகளுக்கு 660 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

புயலினால் சோளச்செய்கை பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளுக்கு 35 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.