.webp)
-608366-552961.jpg)
Colombo (News 1st) நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக செயற்படுத்தப்படும் 'Rebuilding Sri Lanka' தேசிய திட்டம் இன்று(13) ஆரம்பமானது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இதற்கான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச உத்தியோகத்தர்கள், வௌிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது டித்வா சூறாவளியினால் உயிரிழந்தவர்களுக்கு ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழப்புகள், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட டித்வா சூறாவளியின் பின்னரான புனர்வாழ்வு, மீட்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் Rebuilding Sri Lanka செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
Rebuilding Sri Lanka திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
