.webp)

COLOMBO (News 1st) அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசலைகளில் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (09) நிறைவுக்குவந்தன.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
அனர்த்த நிலைமையினால் பிற்போடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
நாடளாவிய ரீதியிலுள்ள 2086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
அனர்த்த நிலைமையினால் தேசிய அடையாள அட்டை காணாமல் போயுள்ள மாணவர்கள் பாடசாலை அதிபரிடமும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பிரதேச செயலாளரிடமும் சான்றுப்படுத்தப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஊடாக பரீட்சைக்கு சமுகமளிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
