.webp)

COLOMBO (News 1s) கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு தொடர்பிலான வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்களை தௌிவூட்டும் ஊடக சந்திப்பு இன்று (09) நடைபெற்றது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 3 கட்டங்களாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் மத்துரட்ட, ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 2 கட்டங்களாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம, வெலிமடை, கந்தகெட்டிய, பதுளை, மீகஹகிவுல, ஹாலி - எல, பசறை மற்றும் லுணுகலை பிரதேச செயலகப் பிரிவுகள், கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலகப் பிரிவு, மாத்தறை மாவட்டத்தில் அமங்கா கோரலை, உக்குவெல, இரத்தோட்டை, நாவுல மற்றும் லக்கல , பல்லேகம பிரதேச செயலகப் பிரிவுகள், நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு ஆகிய இடங்களுக்கு அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
