.webp)

.
COLOMBO (News 1st) தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுச்சேரி பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) பலத்த மழை பெய்வதற்கான செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடற்பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிரதேசங்களுக்கும் புதுச்சேரி, காரைக்கால் கடற் பகுதிகளுக்கும் செல்வதை அடுத்த 2 நாட்களுக்கு தவிர்க்குமாறு மீனவர்களுக்கும் கடற்சார் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
