.webp)

COLOMBO (News 1st) அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரில் குடிவரவு அதிகாரிகளினால் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகிய ஆணும், பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போர்ட்லன்ட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகிய இருவரின் நிலை தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.
வெனிசுவேலாவிலுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவை சேர்ந்த ஒருவரை சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் பயணித்துக்கொண்டிருந்த காரை அதிகாரிகள் மீது செலுத்த முயன்றபோது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின், மினசோட்டா மாநிலத்தின் மினியோபோலிஸ் பகுதியில் நேற்றுமுன்தினம் (07) குடிவரவு அதிகாரியொருவரால் பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
