.webp)

Colombo (News 1st) தரம் 06 ஆங்கிலப் பாடத்திற்கான மொடியூலில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய தரம் 06 ஆங்கில பாடத்திற்கான மொடியூலை இரத்து செய்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
எனவே அந்த மொடியூலில் உள்ளடக்கப்பட்டிருந்த பொருத்தமற்ற வலைத்தள முகவரி தொடர்பில் தேவையற்ற பிரசாரங்களை தவிர்க்குமாறும் பிரதமர், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.
