.webp)

Colombo (News 1st) ஜெர்மனி மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யும் செயற்பாட்டில் இது முக்கிய மைல்கல்லாக அமைவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் வழங்குநர் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்களில் நிலுவையிலுள்ள கடனை மறுசீரமைப்பதன் மூலம் கடன் நிவாரணம் வழங்க ஜெர்மனி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை 188 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜெர்மனி - இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த உதவும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
