.webp)
-607739-552651.jpg)
Colombo (News 1st) 2025 Pinnacle விருது வழங்கும் விழாவில் நியூஸ் ஃபெஸ்ட், கம்மெத்த மற்றும் சிரச TV-க்கு பல விருதுகள் கிடைத்தன.
2025 Pinnacle விருது விழா கொழும்பில் நடைபெற்றது.
எம்.யூ.ஜி.பீ நிறுவனம் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்து.
பல்வேறு துறைகளுக்காக இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.
வருடத்தின் சிறந்த தன்னார்வ சேவைக்கான விருதை கம்மெத்த சுவீகரித்தது.
வருடத்தின் சிறந்த ஊடக செய்தி சேவைக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட் வசமானது.
ஊடக சேவைக்கான சிறப்பு விருதை சிரச TV நியூஸ் ஃபெஸ்டின் அசோக டயஸ் பெற்றுக் கொண்டார்.
ஆண்டின் பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒமாயா கோவிலகொடகே விருது வென்றார்.
ஆண்டின் பிரபல்யமான தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கான விருது விந்தன பிரசாத் கருணாரத்ன வசமானது.
ஆண்டின் சிறந்த இளைஞர் தொலைக்காட்சிக்கான விருது சிரச TV-க்கு வழங்கப்பட்டது.
The Voice Sri Lanka நிகழ்ச்சியும் இதன்போது விருது வென்றது.
ஆண்டின் பிரபல்யமான அரசியல் நிகழ்ச்சிக்கான Pinnacle விருது 'சட்டன' அரசியல் நிகழ்ச்சிக்கு கிடைத்தது.
ஆண்டின் சிறந்த மோட்டார் வாகனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது Auto Vision நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கல்விசார் நிகழ்ச்சி ஒளிபரப்பு அலைவரிசைக்கான விருது Elephant House Super Heroes மற்றும் The Debater நிகழ்ச்சிகளுக்காக சிரச TV வசமானது.
ஆண்டின் பிரபல வானொலி சேவைக்கான விருதை சிரச FM வென்றது.
சிரச TV-யில் ஒளிபரப்பாகும் Aale தொலைகாட்சி தொடரில் நடிக்கும் யஷ் வீரசிங்க ஆண்டின் வளர்ந்து வரும் நடிகருக்கான விருதை வென்றார்.
அதே நாடகத்தில் நடிக்கும் சுஹந்தி வோசதி ஆண்டின் வளர்ந்து வரும் நடிகைக்கான விருதை தன்வசப்படுத்திக் கொண்டார்.
