வெனிசுவேலா ஜனாதிபதியை விடுவிக்கவும் - சீனா

வெனிசுவேலா ஜனாதிபதி உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்தல்

by Staff Writer 04-01-2026 | 4:17 PM

Colombo (News 1st) அமெரிக்காவினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.

இறையாண்மை கொண்ட அரசுக்கு எதிராக அரசியல் பலத்தை பயன்படுத்துவதும் அதன் தலைவரை கடத்துவதும் சர்வதேச சட்டத்தையும் ஐ.நா. சாசனத்தையும் மீறும் செயலென சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கை மூலம் அல்லாமல் பேச்சுவார்த்தை மற்றும் சமரசங்கள் மூலம் நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமென சீனா குறிப்பிட்டுள்ளது.