வெனிசுவேலா ஜனாதிபதி, அவரது மனைவி கைது

வெனிசுவேலா ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப்பிடித்த அமெரிக்கா

by Staff Writer 03-01-2026 | 5:58 PM

COLOMBO (News 1st)  வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் அவர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவேலா நேரப்படி இன்று (03) காலை வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதன்போது, வெனிசுவேலாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

தாக்குதல்களுக்கு பதிலளித்த வெனிசுவேலா ஜனாதிபதி தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்துவதாகக் கூறினார்.