.webp)
-607539-552564.jpg)
Colombo (News 1st)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள மத்துகம பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க நேற்று(02) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ அறையை ஆக்கிரமித்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
தமது உத்தியோகபூர்வ அறை, தவிசாளரினால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக மத்துகம பிரதேச சபை செயலாளரினால் நேற்று முற்பகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட மத்துகம பிரதேச சபையின் தவிசாளர் பிரதேச சபையின் செயலாளரான பெண்ணை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
தாக்குதலில் காயமடைந்த செயலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பிரதேச சபையின் தவிசாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மத்துகம பதில் நீதவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
