சுற்றாடல் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை

சுற்றாடல் சட்டங்களை கடுமையாக மீறியுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 03-01-2026 | 6:50 PM

Colombo (News 1st) சுற்றாடல் சட்டங்களை கடுமையாக மீறியுள்ள நபர்கள் தொடர்பில் கடந்த நாட்களில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் கூறினார். 

மக்கள் மத்தியில் சென்று அவர்கள் எதிர்கொண்டுள்ள சுற்றாடல் ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நடைபாதைக்கு இடையூறு ஏற்படுத்தல், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் காணப்படுதல் மற்றும் முறையற்ற விதத்தில் குப்பைகளை வௌியேற்றுதல் போன்ற சுற்றாடல் நடவடிக்கை மீறல்கள் தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சுற்றாடல் சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்தவும் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.