11 இந்திய மீனவர்கள் கைது

SEA OF SRI LANKA கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 02-01-2026 | 2:34 PM

COLOMBO( News 1st)

SEA OF SRI LANKA கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றிரவு(01) கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். 

கடற்படையினர் முன்னெடுத்த ரோந்துப் பணியின்போது காங்கேசன்துறை கடற்பரப்பிற்கு அருகே இந்திய மீனவர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் கூறினார். 

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை கரைக்கு அழைத்து வந்து கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

கடந்த வருடத்தில் மாத்திரம் SEA OF SRILANKA கடற்பரப்பில் அத்துமீறி வந்த 43 படகுகளுடன்  344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வருடத்தின் இரண்டாம் நாளிலேயே 11 இந்திய மீனவர்களின் கைது பதிவாகியுள்ளது.