இவ்வருடத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை

2018ஆம் ஆண்டின் பின்னர் அதிகூடிய சுற்றுலா பயணிகள் வருகை தந்த ஆண்டாக இவ்வருடம் பதிவானது..

by Staff Writer 29-12-2025 | 3:01 PM

COLOMBO (News 1st) 2018ஆம் ஆண்டின் பின்னர் நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று பதிவாகியது.

2018ஆம் ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23,33,796 ஆக பதிவாகியிருந்தது.

இவ்வாண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23,33,797 அதிகரித்துள்ளது.

23,33,79ஆவது சுற்றுலாப் பயணி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்தார்.

இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்மை குறிப்பிடத்தக்கது.