குஷ் போதைப்பொருளுடன் 04 சந்தேகநபர்கள் கைது

குஷ் போதைப்பொருளுடன் 04 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 29-12-2025 | 7:00 PM

Colombo (News 1st) குஷ் போதைப்பொருள் தொகையுடன் 04 சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டுவந்த பயணப்பைகளிலிருந்து 20 கிலோ 684 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.