தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம்

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம்

by Staff Writer 27-12-2025 | 8:18 PM

Colombo (News 1st) தாய்லாந்து - கம்போடியா இடையே உடன் அமுலாகும் வகையில் போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அந்த நாட்டு நேரப்படி இன்று மாலை 05 மணி முதல் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே 72 மணித்தியால போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தினால் சிறை பிடிக்கப்பட்ட 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் எல்லையில் நீடித்த இராணுவ மோதல்களினால் இதுவரை 41 பேர் உயிரிழந்ததுடன் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கு இருநாட்டு இராணுவத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்..

கம்போடியாவிடமுள்ள தமது நாட்டின் பிராந்தியங்களை மீள கைப்பற்றும் நோக்கில் புதிய தாக்குதல்களை தாய்லாந்து இராணுவம் ஆரம்பித்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோதல்களை நிறுத்துவதற்கு முயற்சித்த போதும் அவை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.