விசேட பஸ் சேவை

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் கொழும்புக்கு வர விசேட பஸ் சேவைகள்

by Staff Writer 27-12-2025 | 7:49 PM

Colombo (News 1st) சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் தலைநகரம் திரும்புவதற்காக நாளை முதல் விசேட போக்குவரத்து  சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சில மாகாணங்களில் பஸ்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சங்க வீரசூரிய தெரிவித்தார்.

அனுராதபுரம், நுவரெலியா, பதுளை, கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகை தரும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவையின் ஊடாக பஸ்கள் சேவையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்புக்கு வருகை தரும் மக்களுக்காக தூர இடங்களுக்கான மேலதிக போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையில் நகர்சேர் கடுகதி ரயில் நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து நாளைமறுதினம் அதிகாலை 05 மணிக்கு கொழும்பு - கோட்டை வரை விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.