.webp)
-606860-552262.jpg)
Colombo (News 1st) மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை பரிசோதனை செய்யும் பொலிஸ் சுற்றிவளைப்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு, வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் W. P. J சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை பரிசோதனை செய்யும் கருவிகளுக்கு கடந்த காலத்தில் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் தற்போது அந்த பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் W. P. J. சேனாதீர குறிப்பிட்டார்.
மேலும் ஒரு தொகுதி புதிய கருவிகளைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
