நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு

by Staff Writer 26-12-2025 | 6:24 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(26) இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை  மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு மழைச் சரிவுகளிலும் வட மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.