தெற்கு கடலில் கைதான ஐவரும் தடுத்து வைத்து விசாரணை

தெற்கு கடலில் போதைப்பொருளுடன் கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

by Chandrasekaram Chandravadani 25-12-2025 | 6:30 PM

Colombo (News 1st) நாட்டின் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரால் கைப்பற்றட்ட மீன்பிடி படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு நேற்று(24) கொண்டுவரப்பட்டது.

குறித்த படகிலிருந்த 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினுக புத்தா என்ற குறித்த மீன்படி கப்பல் கந்தரயிலிருந்து கடந்த மாதம் 09ஆம் திகதி கடலுக்கு சென்றுள்ளது.

கரைக்கு கொண்டுவரப்பட்ட படகை சோதனைக்குட்படுத்திய போது 170 போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெவுந்தர பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் படகின் உரிமையாளர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் வெளிக்கொணரப்பட்டுள்ளது.