.webp)

Colombo (News 1st) கிராண்ட்பாஸ் பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைத்த தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் குறித்த துப்பாக்கி நேற்றிரவு(24) கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
