.webp)
Colombo (News 1st) டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதத்தை சீரமைப்பதற்காக இந்தியாவினால் 450 மில்லியன் டொலர் நிவாரண உதவி பொதி வழங்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று(23) தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த நிவாரண உதவியில் 350 மில்லியன் டொலர் சலுகை கடனும் 100 மில்லியன் டொலர் நிதியுதவியும் அடங்குவதாக கூறினார்.
