காங்கேசன்துறை - அனுராதபுர ரயில் சேவை மீள ஆரம்பம்

24 நாட்களுக்கு பின்னர் காங்கேசன்துறை - அனுராதபுர ரயில் சேவை மீள ஆரம்பம்

by Staff Writer 22-12-2025 | 3:51 PM

Colombo (News 1st) வடக்கு மார்க்கத்துடனான காங்கேசன்துறை - அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் போக்குவரத்து இன்று(22) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

24 நாட்களின் பின்னர் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி வௌ்ளம் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

யாழ் ராணி ரயில் சேவையானது காங்கேசன்துறையில் இன்று காலை 6 மணிக்கு பயணத்தை ஆரம்பித்ததுடன் முற்பகல் 10.17-க்கு அனுராதபுரத்தை சென்றடைந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்திலிருந்து மீண்டும் பிற்பகல் 2.30-க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், மாலை 6.53-க்கு காங்கேசன்துறையை சென்றடையுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.