.webp)

Colombo (News 1st) அம்பேவெல - பதுளை மற்றும் கொழும்பு கோட்டை - திருகோணமலை ரயில் சேவைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அம்பேவெல - பதுளை இடையே 2 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் காலை 7 மணிக்கு நாளை முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
வடக்கு மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து மாஹோ வரை மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.
கலாஓயா பாலத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் காங்கேசன்துறை வரையான ரயில் போக்குவரத்தில் காணப்படும் தடைகள் நீக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
