.webp)
-552046.jpg)
Colombo (News 1st) மன்னம்பிட்டி - கொட்டலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை - தளுகான பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டிப்பர் சாரதியான குறித்த நபர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி செய்த முறைபாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக 3 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வெலிகேபொல ஹந்தகிரிகொட பகுதியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கழுத்து நெறிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
