.webp)

Colombo (News 1st) தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Facebook மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 4 கிராம் ஐஸ், 1875 மில்லிகிராம் கிராம் ஹஷ், 2769 மில்லிகிராம் கிராம் குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொடகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 முதல் 31 வயதிற்கு இடைப்பட்ட 22 ஆண்கள் மற்றும் கண்டி, நீர்கொழும்பு, பூண்டுலோயா பகுதிகளை சேர்ந்த 21 முதல் 26 வயதிற்குட்பட்ட 04 பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
