.webp)
-551932.jpg)
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வௌிநாட்டு உதவிகளை முகாமைத்துவம் செய்வதற்காக உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நேற்று(10) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிடைக்கும் உதவிகள் உரிய முறையில் தரவு கட்டமைப்பில் உள்ளிடுதல், அவற்றை உரிய நபர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவத்திற்காக பெறப்படும் உதவிகள் பொருத்தமான நபர்களுக்கு சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அது குறித்த சரியான தரவுகளை சேகரிப்பதற்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அண்மையில் அனர்த்த முகாமைத்துவ குழுவை நியமித்திருந்தார்.
