ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுர

அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுர

by Staff Writer 09-12-2025 | 4:58 PM

Colombo (News 1st) மிகவும் அத்தியாவசியமான சந்தர்ப்பத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

X தளத்தில் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

C-130 விமானத்தை அனுப்பி வைத்தமைக்கும் அவசர உதவியாக 2 மில்லியன் டொலர்களை வழங்கியதற்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.