.webp)

Colombo (News 1st) நாளை(09) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மழையுடனான வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 30 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
