இடியுடன் கூடிய மழை பெய்யலாம் - எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யலாம் - கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம் ; எச்சரிக்கை

by Staff Writer 06-12-2025 | 8:44 PM

Colombo (News1st) மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று(06) இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக வலுவடைந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.