.webp)
-551792.jpg)
Colombo (News1st) "Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மூலம் சுமார் 635 மில்லியன் ரூபா நிதியுதவி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் கணக்கின் ஊடாக 30,470-இற்கும் மேற்பட்ட வைப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் வௌிநாட்டு நாணயங்களில் வைப்பிலிடுவதற்கான கணக்கினூடாக இதுவரை 61 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளதாகவும் இந்த கணக்கிற்கு 33 நாடுகளிலுள்ள இலங்கையர்களினால் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
"Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு இதுவரை 700 மில்லியன் ரூபா, நன்கொடையாக கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி, ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
