குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணைக்கு அனுமதி..

குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி

by Staff Writer 05-12-2025 | 1:31 PM

Colombo (News1st) பாராளுமன்றத்தில் இன்று(05) சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் இதனை தெரிவித்தார்.

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக இந்த குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.