பேரிடரிலிருந்து மீள்வதற்கு பாராளுமன்றில் பிரேரணை

பேரிடரிலிருந்து மீள்வதற்கு 50 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை

by Staff Writer 04-12-2025 | 6:07 PM

Colombo (News 1st) திடீர் அனர்த்த நிலைமையால் ஏற்பட்டுள்ள ​பேரிடரிலிருந்து மீள்வதற்கு 50 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை நேற்று(03)  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

20 பில்லியன் ரூபா அபிவிருத்தி நிவாரணங்களுக்காகவும் 30 பில்லியன் ரூபா அபிவிருத்தி உதவிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.