மீள திறக்கப்பட்ட கடுகண்ணாவை பகுதி

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதி போக்குவரத்திற்காக மீள திறப்பு

by Staff Writer 04-12-2025 | 5:29 PM

Colombo (News1st) கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதி போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்களுக்கமைய இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருவழிப் போக்குவரத்தாக மாத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல ஆயுர்வேத பல்கலைக்கழகத்திற்கு அருகில் தாழிறங்கிய வீதி தற்போது புனரமைக்கப்பட்டு நான்கு ஒழுங்கைகளும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை கூறியுள்ளது.

அத்துடன், குருணாகல் - புத்தளம் வீதி, திருகோணமலை - புத்தளம் வீதிகளை இன்று பிற்பகல் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த நிலைமைகளால் சேதமடைந்த 176 வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் T.பாஸ்கரன் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய வீதிகளின் போக்குவரத்து அடுத்த சில நாட்களில் வழமைக்கு கொண்டுவரப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் T.பாஸ்கரன் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.