.webp)

Colombo (News1st) டித்வா சூறாவளியால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சக்தி - சிரச நிவாரண யாத்திரை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக இன்றும்(04) முன்னெடுக்கப்படுகிறது.
பொதுமக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் 24 மணித்தியாலங்களில் தரைவழி, கடல்வழி, வான் மார்க்கங்களினூடாக மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்காக பொதுமக்களால் வழங்கப்படும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
சக்தி - சிரச நிவாரண யாத்திரை இன்று காலை புத்தளம், சிலாபம், ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமை வளாகத்திலிருந்து கண்டியின் உடுதும்பர பகுதிக்கும் இன்று நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
தெபானம கலையகத்திலிருந்து மஹியங்கனை மற்றும் கலாவெவ பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கான அத்தியாவசியப் பொருட்கள் காலி கஹந்துவத்த பகுதியிலும் சேகரிக்கப்படுகின்றது.
ஹாரகம, மைலப்பிட்டிய, பஸ்கம, ஹேவாவிஸ்ஸ மற்றும் மாரஸ்ஸன உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
ஹுன்னஸ்கிரிய - உடுதும்பர பகுதியின் நுகெதென்ன பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றிரவு உலருணவுப் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டன.
சிலாபம் - ஆராச்சிகட்டுவ மஹாவெவ பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஜா - எல பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் கண்காணிப்பில் இலங்கை இராணுவம் சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு பங்களிப்பு நல்குகின்றது.
