அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

நைனா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிரை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு வர்த்தமானி

by Staff Writer 03-12-2025 | 3:14 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நைனா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பெயரிடப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரினால் நைனா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிரின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நைனா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிரை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.