.webp)
-551635.jpg)
Colombo (News 1st) 'டித்வா' சூறாவளியினால் இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Tim Cook அனுதாபம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் அழிவடைந்த சொத்துக்களை மறுசீரமைப்பதற்காகவும் தேவையான நன்கொடைகளை வழங்குவதற்கும் Apple நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக Tim Cook குறிப்பிட்டுள்ளார்.
