சுங்கத் திணைக்களத்தின் அறிவித்தல்

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரி மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிக்க தீர்மானம் - சுங்கத் திணைக்களம்

by Staff Writer 02-12-2025 | 5:16 PM

Colombo (News 1st) வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் அனுமதிக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, வௌிவிவகார அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக நிவாரணங்களாக தேவைப்படும் பொருட்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் பின்னர் விமானம் அல்லது கடல் மார்க்கமாக நாட்டிற்கு அனுப்பும் பொருட்களை வரியின்றி விடுவித்துக்கொள்ள முடியும்.

இதற்காக இறக்குமதியாளரினால் குறித்த பொருட்கள், செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம்(DMC), வித்யா மாவத்தை, கொழும்பு 07 என முகவரியிடப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.

அத்துடன், Megaphone, மீட்புக்கயிறு, சார்ஜ் செய்யக்கூடிய Torch, மீட்பு டியூப், பாதுகாப்பு தலைக்கவசம், 40 குதிரைவலு கொண்ட படகு எஞ்சின்கள், ஜெனரேட்டர், Boot, உயிர் பாதுகாப்பு அங்கி, நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட பொருட்களையும் யூரியா, TSP, MOP உள்ளிட்ட உர வகைகளையும் நன்கொடையாக வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.