.webp)
-551623.jpg)
Colombo (News 1st) அனர்த்தங்களுக்குள்ளான இலங்கை மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைக் கொண்டுவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தமது வான்பரப்பை பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இருநாடுகளுக்கிடையே வான்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மனிதாபிமான தேவைகளைக் கருத்திற்கொண்டு பாகிஸ்தானுக்கு தமது வான்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் குறித்த கோரிக்கையை முன்வைத்து 04 மணித்தியாலங்கள் எனும் குறுகிய காலப்பகுதிக்குள் இந்த அனுமதியை இந்தியா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதக் காலப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இராஜதந்திர மோதல் தீவிரமடைந்தது.
பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் சிந்தூர் ஒப்பரேஷன் ஆகியவற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான வான்பரப்பு மூடப்பட்டது.
