உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்

அனர்த்தங்களால் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்

by Staff Writer 02-12-2025 | 2:43 PM

Colombo (News 1st) இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில்  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள், பாரிய அழிவு தொடர்பில் தனது இரங்கலை ஏற்றுக்கொள்ளுமாறும் ரஷ்ய ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.