12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

12 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 26-11-2025 | 2:36 PM

Colombo (News 1st) மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகள், கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் குறித்த அறிவித்தலுக்கமைய, அப்பகுதிகளிலிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பதுளை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டை சூழவுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் மறு அறிவித்தல் வரை கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த அறிவிப்பு வௌியாகும் வரை மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.