கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறப்பு

கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறப்பு

by Chandrasekaram Chandravadani 26-11-2025 | 2:42 PM

Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 04 நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி இன்று(26) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியினூடாக மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் K.W.கன்டம்பி தெரிவித்தார்.

வாகனங்களை நிறுத்தி பார்வையிடுவது அல்லது கேளிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அவர் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஹல கடுகண்ணாவை வீதியை இருவழிப் பாதையாக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு - பதுளை இரவுநேர தபால் ரயில் சேவை மறு அறுவித்தல் வரை நானுஓயா வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.