.webp)

Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் தொல்பொருள் பெயர் பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் கொக்கட்டிச்சோலை பகுதியில் 02 தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிரவௌி பகுதியில் 03 தொல்பொருள் பெயர் பலகைகளும் பங்குடாவௌி பகுதியில் ஒரு தொல்பொருள் பெயர் பலகையும் அகற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பங்குடாவௌி, கதிரவௌி பகுதிகளில் அகற்றப்பட்ட பெயர் பலகைகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, மட்டக்களப்பு - கோரளைப்பற்று பகுதியில் அகற்றப்பட்ட 07 தொல்பொருள் பெயர் பலகைகளையும் மீண்டும் பொருத்துமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் கோரளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 05 பேருக்கு நேற்று(25) உத்தரவிட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் 04 சந்தேகநபர்கள் நேற்று(25) நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
இதற்கு முன்பாக சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அகற்றப்பட்ட 07 தொல்பொருள் பெயர் பலகைகள் வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை வளாகத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
