.webp)

Colombo (News 1st) வருடத்தின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது விழாவில் விளம்பரம் மற்றும் ஊடகத்துறைக்கான விருது MTV Channel தனியார் நிறுவனத்திற்கு கிடைத்தது.
வருடத்தின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது வழங்கல் விழா இன்றிரவு(25) கொழும்பில் நடைபெற்றது.
பல துறைகளில் முக்கிய அங்கமாக காணப்படும் மனிதவள முகாமைத்துவத்துறையை அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கல் விழாவின் நோக்கமாகும்.
மனிதவள முகாமைத்துவ விருது விழாவில் சிறந்த விளம்பரம் மற்றும் ஊடகத்துறைக்கான விருது MTV Channel தனியார் நிறுவனத்திற்கு கிடைத்தது.
விருது விழாவில் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனக்குழு பிரிவில் கெப்பிட்டல் மகாராஜா குழுமம் விருது வென்றது.
அதில் முதலாம் இடத்தை DIMO PLC நிறுவனம் வென்றதுடன் இரண்டாவது இடத்தை LAUGFS Holdings நிறுவனம் பெற்றது.
விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் ஓய்வு பிரிவில் இரண்டாவது இடத்தை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்திற்கு சொந்தமான Fox Resort வென்றது.
முதலாம் இடத்தை ஏகான் குழுமம் சென்றது.
ஆண்டின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது வழங்கல் விழாவில் சிறந்த திறன் முகாமைத்துவ பிரிவிற்கான விருதை மக்கள் வங்கி வென்றது.
விருது விழாவில் Dialog Axiata சிறந்த பரிசு முகாமைத்துவ பிரிவிற்கான விருதை வென்றது.
பெண்களுக்கு உகந்த சிறந்த பணியிடத்திற்கான விருதை NDB வங்கி மற்றும் தலவாக்கலை தேயிலை நிறுவனம் ஆகியன இணையாக பெற்றன.
ஆண்டின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது விழாவில் வங்கிப்பிரிவில் சம்பத் வங்கி விருது வென்றதுடன், கொமர்ஷல் வங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
அதே பிரிவில் இலங்கை வங்கி மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியன முன்றாவது இடத்தை பெற்றன.
