மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 24-11-2025 | 4:14 PM

Colombo (News 1st)  ரம்புக்கனை - மாவனெல்ல வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி மீது நேற்றிரவு(23) மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.

பொலிஸார், இராணுவத்தினர், தீயணைப்புப் பிரிவினர் , பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தோரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ள நிலையில், 57 வயதான ஆண், 48 வயதான பெண் மற்றும் இரண்டரை வயதான பெண் குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.