.webp)

Colombo (News 1st) நேயர்களின் நாடி துடிப்பறிந்து முதற்தர நிகழ்ச்சிக்களை படைத்துவரும் சக்தி FM இன்று(20) தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.
1998 நவம்பர் 20ஆம் திகதி வானொலிப் புரட்சியின் புதியதோர் அத்தியாயமாக சக்தி FM உதயமானது.
அன்று முதல் இன்று வரை தனக்கேயுரிய தனியான பாணியில் மாற்றங்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதில் தமிழ் பேசும் மக்களின் சக்தியாக சக்தி FM வலம் வருகின்றது.
மக்களுக்கு பயன்தரும் பல்வேறு நிகழ்ச்சிகளை காலத்திற்கேற்ப ஒலிபரப்பி வருவதுடன் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மக்களுக்கு குரல் கொடுத்து உதவிக்கரம் நீட்டுவதற்கும் சக்தி FM எப்போதும் பின்நிற்பதில்லை.
இலத்திரனியல் ஊடகத்துறையின் வானலை புரட்சியாய் இன்னும் பல புதுமைகள் படைத்து மக்கள் சேவையை தங்குதடையின்றி தொடர சக்தி FM-இற்கு நியூஸ் ஃபெஸ்ட்டின் ஆத்மார்த்தமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
