22 நிறுவனங்கள் தொடர்பான மத்திய வங்கியின் அறிவிப்பு

22 நிறுவனங்கள் தொடர்பான மத்திய வங்கியின் அறிவித்தல்

by Staff Writer 20-11-2025 | 9:12 AM

Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பிரமிட் யோசனை திட்டத்தின் கீழ் செயற்பட்ட 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது.

திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த விசாரணைகளுக்கு பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

'SGO அல்லது sgomine.com' என்ற நிறுவனம் தடை செய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்கு முன்னர் மேலும் 21 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட நிறுவனங்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

May be an image of map and text